அடக்கொடுமையே… பேரழிவிலும் ஓயாத பேராசை..! ஆற்றில் மிதந்து வந்த வங்கியின் இரும்பு லாக்கர்… சத்தமில்லாமல் உடைத்து 92 லட்சத்தைச் சுருட்டிய 29 பேர் கைது…! நேபாளத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே… பேரழிவிலும் ஓயாத பேராசை..! ஆற்றில் மிதந்து வந்த வங்கியின் இரும்பு லாக்கர்… சத்தமில்லாமல் உடைத்து 92 லட்சத்தைச் சுருட்டிய 29 பேர் கைது…! நேபாளத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவங்கள்..!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கின் போது, ரசுவா பகுதி வங்கி ஒன்றிலிருந்த கனரக இரும்புப் பெட்டகம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு திரிசூலி ஆற்று வழியே தாடிங் மாவட்ட எல்லைக்கு அடித்து வரப்பட்டது. கரையில் ஒதுங்கிய அந்த வங்கிப் பெட்டகத்தைக் கண்டெடுத்த அப்பகுதி நபர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல், கருவிகளைக் கொண்டு அதை உடைத்துள்ளனர். அதனுள் இருந்த பெருந்தொகை பணத்தைக் கண்டு, அதைத் தங்களுக்குள் சட்டவிரோதமாகப் பிரித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தாடிங் மாவட்டக் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், 19 முதல் 49 வயதுக்குட்பட்ட 29 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து சுமார் 92,68,505 நேபாள ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 58 லட்சம் ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கலச்சி, சித்தாலேக் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே வேளையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தங்கத் தோடுகளைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டது உட்பட இதுபோன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நேபாள மக்களிடையே பெருத்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in