LATEST NEWS
“அய்யோ கொடுமையே..! கண்ணெதிரே இடிந்து விழுந்த கனவு இல்லம்..” நடுரோட்டில் நின்று கதறிய அழும் பெண்… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஹனுமனா ஜனபத் பஞ்சாயத்திற்குட்பட்ட பர்ஹி ஜாரி கிராமத்தைச் சேர்ந்த தாஷோதரி பாண்டே என்ற பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் அவரது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததோடு, உட்புறச் சுவர்களும் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. தனது வாழ்நாள் சேமிப்பில் கட்டிய வீடு தன் கண்ணெதிரே இடிந்து தரைமட்டமாகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டின் இடிபாடுகள் மீது அமர்ந்து கதறி அழுதுள்ளார். பார்ப்போரின் நெஞ்சங்களை உலுக்கும் வகையில் அமைந்துள்ள அவரது இந்த அழுகுரல் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/awdheshkmishra/status/2093719001868452021/video/1
இயற்கைச் சீற்றத்தால் தங்களது தங்குமிடத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் இந்த ஏழைக் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நிவாரண உதவிகளையும், மாற்று இட வசதியையும் செய்து தர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அந்தப் பெண்ணின் அவல நிலையை விவரிக்கும் இந்த நெஞ்சுயிர்க்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.
