LATEST NEWS
‘SeeEx’ நேரலையில் நடந்த பயங்கரம்… நடுரோட்டில் பெண்ணை அடித்து, பால் பாட்டிலால் தாக்கிய ஸ்ட்ரீமர்.. இணையத்தில் தீயாய் பரவும் பகீர் வீடியோ..!!
டெக்சாஸில் நடைபெற்ற ‘SeeEx’ நேரலை நிகழ்வில், பிரபல ஸ்ட்ரீமர் டிராகோ என்பவருக்கும் மியாமேக்சுடு என்ற பெண்ணுக்கும் இடையே நடந்த கொடூரமான சண்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், டிராகோ அந்தப் பெண்ணைக் குத்துவதும், அவர் மீது பால் பாட்டிலைத் தூக்கி வீசுவதும், பின்னர் அவரைத் தரையில் பிடித்து இழுத்து அமுக்கி வைப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இரவில் திறந்தவெளிப் பகுதியில் நடந்துள்ள நிலையில், சுற்றியிருந்த சிலர் இந்த மோதலைத் தங்களது மொபைல் போன்களில் படம்பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பயனர்களிடையே பெரும் காரசாரமான விவாதங்களும் மாறுபட்ட கருத்துகளும் எழுந்துள்ளன. டிராகோ ஒரு பெண்ணைத் தாக்கியதாகக் கூறி அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேவேளையில், இதற்கு முன்பாகவே மியாமேக்சுடு டிராகோவிடம் தகராறு செய்ததாகவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே டிராகோ இவ்வாறு நடந்துகொண்டார் என்றும் மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். எனினும், மோதலுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பின்னணி இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. டிராகோ என்பவர் பிரபல ‘கிக்’ ஸ்ட்ரீமரான கிளவிக்குலரின் (Clavicular – இயற்பெயர் பிரேடன் பீட்டர்ஸ்) நெருங்கிய நண்பர் ஆவார். தாக்கப்பட்ட மியாமேக்சுடு, கிளவிக்குலரின் முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது. ஐஸ் போஸைடன் மற்றும் நிக் லீ ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த பல நாள் ‘SeeEx’ நிகழ்வில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளும் மோதல்களும் நடந்து வந்த நிலையில், இந்தத் தனிப்பட்டப் பகை இணையவாசிகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
