LATEST NEWS
“ச்சே மனுஷனுங்க கூட இப்படி இருக்க மாட்டாங்க…” எஜமானர் செத்துட்ட பிறகு நாய் பண்ண அந்த ஒரு காரியம்… கண்கலங்கிய ஊர் மக்கள்.!!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பெட்டம் வெங்கன்னா என்பவரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய செல்லப் பிராணி காட்டிய பேரன்பும் விசுவாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தெலங்கானாவின் மஞ்சேரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலத்திற்குட்பட்ட வெல்கானூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கன்னா சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார். ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்ற இறுதி ஊர்வலத்தில் வெங்கன்னாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து, அவருடைய செல்ல நாயும் பின்னாடியே சென்றது. மயானத்தை அடைந்ததும், அந்த நாய் தனது எஜமானரின் ஈமச்சிதையைச் சுற்றி வலம் வந்து, சிதையின் அருகிலேயே போய் அமர்ந்து கொண்டது. தனது எஜமானர் மீண்டும் எழுந்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல அது அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு, அங்கு கூடி இருந்த ஊர் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கினர்; பலரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
மனித வாழ்வில் செல்லப் பிராணிகள் வெறும் காவல் காக்கும் விலங்குகள் மட்டுமல்ல, அவை குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறி அன்பைப் பொழிகின்றன என்பதை இந்நிகழ்வு உணர்த்தியுள்ளது. பேச முடியாத அந்த விலங்கு, தன் வாழ்நாள் முழுவதும் எஜமானர் காட்டிய அன்பை நினைவில் கொண்டு இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளது. மனிதர்களிடையே அன்பும் பாசமும் குறைந்து வரும் இந்த காலத்தில், ஒரு வாயில்லா ஜீவன் காட்டிய இந்த நெகிழ்ச்சியான பாசம் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்துவிட்டது.
