LATEST NEWS
“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா?!” 3 வயது பேத்தியை சூப்பர் மார்க்கெட்டில் கல்நெஞ்சக்கார பாட்டியின் வெறிச்செயல்.. ஊழியர் செய்த மாஸ் காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உக்ரைனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியரின் சமயோசித புத்தியால், 3 வயது சிறுமி அனுபவித்து வந்த நரக வேதனை முடிவுக்கு வந்துள்ளது. அந்தச் சிறுமியை அவளது பாட்டி நடத்தும் விதம் குறித்துச் சந்தேகமடைந்த ஊழியர், அங்குள்ள பாதுகாப்பு கேமரா காட்சிகளைச் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அந்தப் பாட்டி சூப்பர் மார்க்கெட்டின் இடைவாரா வழித்தடங்களில் வைத்து யாரும் பார்க்காத நேரத்தில் அந்தப் பிஞ்சுச் சிறுமியைத் தொடர்ந்து கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
https://twitter.com/InesBetancur1/status/2093849387722019313/video/1
இந்தக் கொடூரச் செயல் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, திட்டமிட்ட உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதற்காக அந்தப் பாட்டி மீது காவல் துறையினர் உடனடியாகக் குற்றவியல் வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக அந்தப் பாட்டியிடமிருந்து மீட்கப்பட்டு, தற்பொழுது ஒரு பாதுகாப்பான வளர்ப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாள். மேலும், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் அச்சிறுமியின் தாயை அவசரமாகத் தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
