அட பாவிங்களா….! கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா…? திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… தூக்கி வீசப்பட்டு துடித்த பைக் ஓட்டுநர்..! உதவக்கூட மனமில்லாமல் தப்பியோடிய குடும்பம்… சூரத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட பாவிங்களா….! கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா…? திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… தூக்கி வீசப்பட்டு துடித்த பைக் ஓட்டுநர்..! உதவக்கூட மனமில்லாமல் தப்பியோடிய குடும்பம்… சூரத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் உஸ்மான் கனி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண், திடீரென காரின் கதவைத் திறந்துள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த முகமது அமீன் எதிர்பாராதவிதமாக காரின் திறக்கப்பட்ட கதவு மீது பலமாக மோதினார். இதில் நிலைகுலைந்த அவர், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில், காரில் இருந்த குடும்பத்தினர் காயமடைந்தவரை கவனித்தும் உதவாமல் அதே காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

பின்னர், அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முகமது அமீன், சிகிச்சை பலனின்றி 4 நாட்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் காரில் இருந்த நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in