LATEST NEWS
இதுதாங்க உண்மையான அன்பு..! கதவைத் தட்டிய டெலிவரி ஊழியர்.. கையில் ராக்கி கட்டி காலில் விழுந்த இளம்பெண்.. அடுத்து நடந்த சம்பவம் தான் வேற லெவல்… சமூக வலைத்தளங்களை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!
குஜராத்தில் டெலிவரி செய்ய வந்த ஊழியரின் கையில் இளம்பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் வதோதரா நகரில் இந்த அழகான நிகழ்வு நடந்துள்ளது. அந்தப் பெண் தனது வீட்டிற்குப் பொருட்களை டெலிவரி செய்ய வந்த இளைஞரை இன்முகத்துடன் வரவேற்று, அவருக்கு ராக்கி கட்டி நெகிழ்வூட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த டெலிவரி இளைஞர், உணர்ச்சிவசப்பட்டு உடனடியாகத் தனது பாக்கெட்டில் இருந்த 50 ரூபாயை எடுத்து அந்தப் பெண்ணிடம் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். “நான் உன்னை எனது சொந்தச் சகோதரியாக ஏற்றுக்கொண்டேன், அதனால் இந்த சிறிய தொகையை மறுக்காமல் வாங்கிக்கொள்” என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். சில நிமிடங்கள் மட்டுமே பழகிய ஒரு நபரைக் குடும்ப உறுப்பினராக நினைத்து அந்தப் பெண் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும், அதற்கு அந்த இளைஞர் காட்டிய தூய்மையான அன்பும் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DckquRBo8uN/?utm_source=ig_web_button_share_sheet
இந்த அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான இணையவாசிகள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் நெகிழ்ச்சியான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். “இந்த 50 ரூபாய் வெறும் பணம் அல்ல; அது தூய்மையான அன்பு, மரியாதை மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான ஆசீர்வாதத்தின் அடையாளம்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு சாதாரண டெலிவரி ஊழியரின் பெருந்தன்மையான குணமும், அந்தப் பெண்ணின் உன்னதமான பண்பும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர்த்துவதாகப் பலரும் உருகியுள்ளனர்.
