LATEST NEWS
இப்படியும் ஒரு மனிதனா..? ஆபத்தில் இருந்த உயிரைக் காப்பாற்றிய டெலிவரி பாய்.. அப்புறம் சொன்ன ஒரே வார்த்தை… நெஞ்சை நெகிழ வைக்கும் பகீர் நிமிடம்..!!
10 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து, ஆபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய அந்த 50 வயது டெலிவரி ஊழியரின் செயல் நெஞ்சை நெகிழ வைக்கிறது. மீட்புப் பணக்குப் பிறகு, தனது பெயரையோ தொலைபேசி எண்ணையோ கூட தெரிவிக்காமல், “எனக்கு இன்னும் டெலிவரி செய்ய வேண்டிய உணவுகள் இருக்கிறது” என்று கூறியவாறே கையாட்டிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
50岁的外卖员从10多米高的桥上跳下去救人,救完没留姓名电话,只摆摆手说:“我还有餐没送”,然后就走了……事了拂衣去,致敬平凡的伟大❤️ pic.twitter.com/KAQpFGGlac— Feiyan Xie (@FeiyanXie) August 9, 2026
தன் கடமையையும், பிறர் உயிரையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட அவர், ஆடையைத் தட்டிக்கொண்டு சாதாரணமாக நடந்து சென்ற காட்சி உண்மையான மனிதநேயத்திற்குச் சான்றாக அமைந்தது. விளம்பர வெளிச்சத்தை விரும்பாமல், தான் செய்த மாபெரும் தியாகத்தை மிகவும் சாதாரணமான ஒன்றாகக் கடந்து சென்ற அந்த எளிய மனிதரின் மகத்தான வீரம் தொடர்பான வீடியோ, தற்போது இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
