LATEST NEWS
முன்னரே எச்சரித்த ISRO ‘நிசார்’..! நேபாள பனிப்பாறை சரிவில் வெளியான அதிர்ச்சி உண்மையும்… விஞ்ஞானிகளின் பரபரப்பு எச்சரிக்கையும்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறை சரிவுக்கு முன்னரே, இஸ்ரோவின் ‘நிசார்’ செயற்கைக்கோள் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளை அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன ரேடார் தொழில்நுட்பம், சம்பவம் நடப்பதற்கு முன்பே அங்குள்ள செங்குத்தான மலைச் சரிவு உருமாற்றம் அடைந்ததையும், அதன் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மலைச்சரிவால் மட்டுமே மிகப்பெரிய ஆபத்து ஏற்படுமா என்பதைத் தீர்மானிக்க, செயற்கைக்கோள் தரவுகள் மட்டும் போதாது என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்குத் தொடர் கண்காணிப்பு, விரிவான புவியியல் பகுப்பாய்வு மற்றும் தரைவழி நேரடி கண்காணிப்பு ஆகியவை மிகவும் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
