LATEST NEWS
“என்ன கொடுமைப்பா இது..! கேமரா ஓடுதுன்னு தெரிஞ்சும் கொஞ்சமாவது பயம் இருக்கா… அரசு ஊழியரை போட்டு வெளுத்த CO..! அலறியடித்து ஓடிய சக ஊழியர்கள்…! வைரலாகும் பகீர் CCTV வீடியோ..!!”
பீகார் மாநிலம், கடிஹார் சதார் வட்டார அலுவலகத்தில், வட்டார அதிகாரி சோனு பகத் மற்றும் ஊழியர் சஞ்சய் வர்மா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் நிர்வாக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில உரிமை மாற்றம் தொடர்பான பிரச்சனையில் தொடங்கிய வாய் தகராறு முற்றி, இருவருக்கும் இடையே கைகலப்பில் முடிந்தது. அரசு அலுவலகத்திலேயே இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகத்தில் நடந்த இந்த ஒழுங்கீனமான செயலை மாவட்ட நிர்வாகம் மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து கடிஹார் மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் திவேதி, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். வருவாய்த் துறை பொறுப்பாளர் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கான உண்மையான காரணம், சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கு குறித்து இக்குழு தீவிரமாக விசாரிக்கும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடுமையான நிர்வாக மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
வட்டார அதிகாரி சோனு பகத் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காதது தொடர்பாக அவர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கீழ்நிலை ஊழியர்களிடம் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் நடந்து கொண்டதாகவும், நில பரிவர்த்தனைகளில் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகவும் கூறி ஊழியர்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தற்போதைய மோதலுக்கான உண்மையான பின்னணி என்ன என்பது போலீஸ் மற்றும் நிர்வாகத்தின் முழுமையான விசாரணை முடிவிலேயே தெளிவாகத் தெரியவரும்.
