“எப்போதும் ஊழல்.. ஊழல்ன்னு பேசுறீங்க” நாங்க சட்டசபைக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா..? எ.வ.வேலுவின் ஆவேசக் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எப்போதும் ஊழல்.. ஊழல்ன்னு பேசுறீங்க” நாங்க சட்டசபைக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா..? எ.வ.வேலுவின் ஆவேசக் கேள்வி..!!

Published

on

ஆளும்கட்சியினர் எப்போதும் பேசினாலும் இடை இடையில் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என ஒரே பாட்டை பாடி வருவதாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளும்கட்சியினரின் இத்தகைய விமர்சனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், “நாங்கள் சட்டசபைக்கு வரக் கூடாது அல்லது உங்கள் பேச்சை கேட்கக் கூடாது என நினைக்கிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டுச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

Advertisement

மேலும், எப்போது பார்த்தாலும் ஊழல் ஊழல் என்று மட்டுமே பேசுவது நல்ல அரசியல் நடைமுறை அல்ல என்றும், இத்தகைய அவதூறு பரப்பும் போக்குகளை ஆளும்கட்சியினர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும் எ.வ.வேலு தனது உரையில் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in