CRIME
“ஒரு உயிர் துடிக்க துடிக்க போச்சே” ஸ்கெட்ச் போட்டு வீட்டுக்கு வரவழைத்த மாமியார்.. நம்பி வந்த மருமகன்… நடுரோட்டில் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்த மைத்துனர்கள்..!!
பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஜகஜித் சிங் (20) என்ற இளைஞர் பேருந்து நிலையத்தில் வைத்து அவரது மைத்துனர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சொந்த குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் துணிகரப் படுகொலை அரங்கேறியுள்ளது.
பலியான ஜகஜித் சிங்கை அவரது மாமியார் தொலைபேசியில் அழைத்து, வீட்டிற்கு வருமாறு பேசியுள்ளார். மாமியாரின் பேச்சை உண்மை என்று நம்பிச் சென்ற இளைஞரை, பேருந்து நிலையப் பகுதியில் அவரது மைத்துனர்கள் உள்ளிட்ட கும்பல் திடீரெனச் சூழ்ந்து கொண்டு பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஜகஜித் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
