“ஐயோ பிரேக் புடிக்கல… மரண பயத்தில் அலறிய பத்திரிகையாளர்… . இன்டர்நெட் கட் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த டிரைவர் இல்லாத கார்…! நேரலையில் போலீஸ் வேனை தவிடுபொடியாக்கிய பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பிரேக் புடிக்கல… மரண பயத்தில் அலறிய பத்திரிகையாளர்… . இன்டர்நெட் கட் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த டிரைவர் இல்லாத கார்…! நேரலையில் போலீஸ் வேனை தவிடுபொடியாக்கிய பகீர் வீடியோ..!!

Published

on

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டிரைவர் இல்லாத காரின் நேரலைச் சோதனையின் போது, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாகப் போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

இஸ்லாமாபாத்தின் பரபரப்பான ‘டி-சவுக்’ பகுதியில், அபோதாபாத்தைச் சேர்ந்த எஹ்சான் ஜாஃபர் என்ற இளம் தொழில்நுட்ப வல்லுநர் ரிமோட் மற்றும் இன்டர்நெட் மூலம் இயங்கும் இந்த காரை உருவாக்கியிருந்தார். இந்தத் தொழில்நுட்பத்தை மக்களுக்குக் காட்டுவதற்காக, முகமது ஆலிஜாஹ் என்ற பத்திரிகையாளர் காரின் பயணிகள் இருக்கையில் அமர்ந்து வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கார் எந்தப் பிரச்சினையுமன்றி சீராகச் சென்றுகொண்டிருந்தது.

Advertisement

ஆனால், திடீரென இன்டர்நெட் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காரைக் கட்டுப்படுத்திய ஆப்பரேட்டரின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் காரின் ஸ்டீயரிங் மற்றும் தானியங்கி அமைப்புகள் கட்டுப்பாட்டை இழந்தன. காரை நிறுத்த பத்திரிகையாளர் ஆலிஜாஹ் ஹேண்ட்பிரேக்கை இழுக்க முயன்றபோதிலும், கார் கட்டுப்பாடின்றிச் சென்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேன் மீது மோதியது. பின்னர் இது குறித்து விளக்கமளித்த பத்திரிகையாளர் ஆலிஜாஹ், இந்த சம்பவம் ஒரு இளம் கண்டுபிடிப்பாளரின் முயற்சியை கேலி செய்வதற்காக அல்ல என்றும், புதிய தொழில்நுட்பப் பாதுகாப்பில் இது ஒரு பெரிய பாடம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in