“என் பொண்டாட்டியை கொன்னுட்டாங்க சார்..!” விபத்து விடுப்பு தராமல் அலட்சியம் காட்டிய எஸ்பி ஆபீஸ்… போலீஸ் நிலைய வாசலில் தேம்பித் தேம்பி அழுத கணவன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பொண்டாட்டியை கொன்னுட்டாங்க சார்..!” விபத்து விடுப்பு தராமல் அலட்சியம் காட்டிய எஸ்பி ஆபீஸ்… போலீஸ் நிலைய வாசலில் தேம்பித் தேம்பி அழுத கணவன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் கேசரி வர்மா (30). கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் இவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்டன. காயத்திற்குத் தொடர் சிகிச்சை பெறுவதற்காக, அவர் பஸ்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய மருத்துவ ஆவணங்களுடன் விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்குத் தேவையான மருத்துவ விடுப்பு வழங்கப்படாமல் நிர்வாகத் தரப்பில் அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உரிய ஓய்வும் சிகிச்சையும் இன்றி அவரது உடல்நிலை மோசமடைந்தது.

https://twitter.com/ProfNoorul/status/2093674100338430202/video/1

Advertisement

விடுப்பு கிடைக்காத நிலையிலும் கடமையைச் செய்து வந்த கேசரி வர்மாவின் உடல்நிலை சனிக்கிழமை அதிகாலையில் திடீரென மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் அவரது கணவர் நாகேந்திர வர்மா, தனது மனைவியின் மரணத்திற்குத் துறை ரீதியான அலட்சியமே காரணம் எனத் தெரிவித்துள்ளார். “எனது மனைவிக்கு உரிய நேரத்தில் விடுப்பு வழங்கி, முறையான சிகிச்சை கிடைக்கச் செய்திருந்தால் அவள் இன்று உயிரோடு இருந்திருப்பாள்” என்று அவர் மருத்துவமனை வளாகத்தில் தேம்பித் தேம்பி அழுது நீதிகேட்டுக் கதறியது பார்ப்போரின் நெஞ்சங்களை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in