LATEST NEWS
“என்னப்பா சொல்றீங்க… அருணாச்சலப் பிரதேசத்துல ஓணமா..?” வேட்டி-சட்டையில் ‘அப்படி போடு’ பாடலுக்கு மாணவர்கள் ஆடிய வேற லெவல் நடனம்… வைரலாகும் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்துப்போன மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு..!!
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாணவர்கள், கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணப் பண்டிகையைக் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். மாணவர்கள் வேட்டி மற்றும் சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் “அப்படி போடு” மற்றும் “தக தக” உள்ளிட்ட பிரபலமான மலையாளப் பாடல்களுக்கு நடனமாடி ஓணத்தைக் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விழாக் கொண்டாட்டத்தின் வீடியோவைப் பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அருணாச்சல பிரதேசத்தில் என்ன ஒரு அற்புதமான ஓணம்! அருணாச்சலப் பிரதேசத்திலேயே கேரளாவை உணர்வது போல் உள்ளது” எனக் குறிப்பிட்டுத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தென்னிந்தியாவின் பாரம்பரியப் பண்டிகையை இவ்வளவு ஆர்வத்துடன் கொண்டாடுவதை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தக் காணொளி சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கும் இதுவே மிகச்சிறந்த சான்று என்று இணையவாசிகள் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
