அப்படிப்போடு..! இந்தா இத நீயே சாப்பிடு… கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிட்டு தப்பிக்க பார்த்த எஃப்.டி.ஏ அதிகாரி…! வாயில் காலாவதியான பிஸ்கட்டை திணித்து அலறவிட்ட மக்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்படிப்போடு..! இந்தா இத நீயே சாப்பிடு… கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிட்டு தப்பிக்க பார்த்த எஃப்.டி.ஏ அதிகாரி…! வாயில் காலாவதியான பிஸ்கட்டை திணித்து அலறவிட்ட மக்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிடுமாறு ஆத்திரமடைந்த மக்களால் வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, அந்த அதிகாரியை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள பாக்கெட் கடை ஒன்றில் வாங்கப்பட்ட நொறுக்குத்தீனியை சாப்பிட்ட இரண்டு வயது குழந்தை ஒன்றுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும், சம்பந்தப்பட்ட கடையை ஆய்வு செய்யக் கோரி எஃப்.டி.ஏ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆய்வு நடத்த அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

Advertisement

அதிகாரி கடைக்குள் ஆய்வு மேற்கொண்ட போது, குழந்தை சாப்பிட்ட குறிப்பிட்ட உணவுப் பொருள் ஏற்கனவே அலமாரிகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. இருப்பினும், கடையில் சோதனையிட்ட போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அதிகாரி லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க முயல்வதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பிஸ்கட்டுகளை அந்த அதிகாரியின் வாயில் பலவந்தமாக திணித்து அதை உண்ணுமாறு வற்புறுத்தினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in