“ஹலோ கவர்மெண்ட் ஆபீஸா…? நான் தான் அந்த வினாத்தாளை லீக் பண்ணினேன்… காதலிக்காக கொஸ்டின் பேப்பர் திருட்டு..! பிரேக்ப் ஆனதால் காதலனே போட்டுக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹலோ கவர்மெண்ட் ஆபீஸா…? நான் தான் அந்த வினாத்தாளை லீக் பண்ணினேன்… காதலிக்காக கொஸ்டின் பேப்பர் திருட்டு..! பிரேக்ப் ஆனதால் காதலனே போட்டுக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

மகாராஷ்டிராவில், காதலிக்காக அரசுத்தேர்வு வினாத்தாளை காதலன் லீக் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்கு எப்படியாவது மருந்தக ஆய்வாளர் வேலை கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர் இந்தத் தவறான காரியத்தைச் செய்துள்ளார். இதற்காக அரசுத் தேர்வு வாரியத்தின் ரகசிய வினாத்தாளை சட்டவிரோதமாகக் கைப்பற்றி, தனது காதலிக்கு அனுப்பி தேர்வெழுத உதவியுள்ளார்.

ஆனால், எதிர்பாராத திருப்பமாக தேர்வுக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் உறவு முறிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், தானாக முன்வந்து தான் செய்த குற்றத்தைச் சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்திடம் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிந்ததால் இந்தத் தேர்வே ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி, நேர்மையாகப் படித்து தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கடுமையான பாதிப்புக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in