“அரசு கட்டாட்டி என்ன.. நாங்க கட்டுவோம்..!” மலேசிய மாணவருக்காக களம் இறங்கிய ஸ்டாலின்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசு கட்டாட்டி என்ன.. நாங்க கட்டுவோம்..!” மலேசிய மாணவருக்காக களம் இறங்கிய ஸ்டாலின்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!..!!

Published

on

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்’ பிரிவில் பி.எச்.டி.ஆராய்ச்சி செய்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயின்று வரும் இவருக்கு, ஆட்சி மாற்றத்தைக் காரணம் காட்டி நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தனது பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகிவிடும் என்றும், ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போன்ற நிலை தனக்கும் ஏற்படுவதாக அம்மாணவர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசு ஃபீஸ் கட்டாவிட்டால் திமுகவும், தமிழக மக்களும் கல்வி கட்டணத்தைச் செலுத்தி அந்த மாணவரைப் படிக்க வைப்போம்” என்று உறுதியளித்துள்ளார். ஆட்சி மாற்றம் காரணமாக ஒரு மாணவரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in