LATEST NEWS
“அய்யோ கடவுளே.. கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் பலமுறை பல்டி அடித்த கார்…” உள்ளே சிக்கிய பெண் ஓட்டுநர்… மிரண்டுபோன பொது மக்கள் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சி..!!
ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் பெரும் கார் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பேகம்பேட்டையிலிருந்து பஞ்சகுட்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த XUV 700 கார் ஒன்று, அங்குள்ள பிரபல லைஃப்ஸ்டைல் கட்டடத்திற்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பலமுறை தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சமயத்தில் அந்த காரின் அருகே மற்ற வாகனங்களோ அல்லது பொதுமக்களோ இல்லாததால் ஒரு பெரிய அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து நடந்த உடனே அருகிலிருந்த பொதுமக்கள் விரைவாகச் செயல்பட்டு, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். காரில் அந்த பெண் மட்டுமே பயணித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு வந்த பஞ்சகுட்டா காவல் துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
