LATEST NEWS
அடக்கொடுமையே… வெள்ளையாகணும்னு ஆசைப்பட்டு கடைசியில இப்படியா ஆகணும்..? 22 வயது இளம் மருத்துவருக்கு நேர்ந்த கோர முடிவு..! பின்னணியில் பகீர் மர்மம்..!!
மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில், வெள்ளையாக மாற மருந்து மாத்திரைகளை உட்கொண்ட 22 வயதான ஆதித்ய ராவடே என்ற பயிற்சி மருத்துவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் நாசிக்கில் பி.ஏ.எம்.எஸ் மருத்துவப் படிப்பை முடித்த ஆதித்ய ராவடே, அமராவதியின் வல்கான் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசித்து வந்தார். தனது நிறத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்காக அவரே சில மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் தான் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசிரா பரிசோதனை அறிக்கைகாகக் காத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று ஆதித்யா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அவர் குப்புறப் படுத்த நிலையில், உடலில் எந்தவித அசைவுமின்றி இருந்தது தெரியவந்தது. மேலும், அவரது கண்களிலிருந்து ரத்தமும் வடிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். தனது சிவப்பழகை அதிகரிப்பதற்காக அவரே சுயமாக சில மருந்து சிகிச்சைகளை எடுத்து வந்ததாகக் கூறப்படும் வேளையில், அளவுக்கு அதிகமான மருந்து உட்கொண்டதே இதற்குக் காரணமா என்ற சந்தேகத்தை காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
அதேவேளையில், ஆதித்யாவுக்கு சிறுவயதிலிருந்தே வலிப்பு நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வலிப்பு நோய் காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது மருந்து ஓவர்டோஸ் காரணமாக உயிரிழந்தாரா என்ற இரு கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஆகியவை சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதுவே இறுதி முடிவல்ல என போலிசார் தெரிவித்துள்ளனர். போலிஸ் ஆய்வாளர் ரீதா உய்கே இதுகுறித்து கூறுகையில், விரிவான பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசிரா அறிக்கை வந்த பிறகே ஆதித்யாவின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
