ஒரே ஒரு OTP… வெடித்த மொழிப் போர்..! மராத்தியில் எண்களைச் சொன்ன பயணியிடம்… “ஆப் ஆங்கிலத்துல இருக்கு” எனச் சீறிய கேப் டிரைவர்..! இணையத்தைக் கலக்கும் வாக்குவாதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே ஒரு OTP… வெடித்த மொழிப் போர்..! மராத்தியில் எண்களைச் சொன்ன பயணியிடம்… “ஆப் ஆங்கிலத்துல இருக்கு” எனச் சீறிய கேப் டிரைவர்..! இணையத்தைக் கலக்கும் வாக்குவாதம்..!!

Published

on

மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நடைமுறை மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை ஆகஸ்ட் 20 முதல் அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நடுவே, வாடகைக்கார் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே மொழிப் பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயணத்தின் போது தனது ஓடிபி எண்ணை பயணி மராத்தியில் கூறியதை அடுத்து, இருவருக்கும் இடையே இந்த மோதல் தொடங்கியது.

பயணி காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து வீடியோவைப் பதிவு செய்யத் தொடங்கியதும், ஓட்டுநர் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்கிறார். ஆனால், அந்தப் பயணி தனது 4 இலக்க OTP எண்ணை மீண்டும் மராத்தி மொழியிலேயே கூறுகிறார். இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், தனது மொபைல் போனை டேஷ்போர்டில் வைத்துவிட்டு, “ஆப் ஆங்கிலத்தில் உள்ளதா அல்லது மராத்தியில் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பி, பயணிகளையே நேரடியாக ஓடிபி எண்ணை உள்ளிடுமாறு கூறுகிறார்.

Advertisement

அதற்குப் பதிலளித்த பயணி, ஓட்டுநர் மகாராஷ்டிராவில் தான் வாகனம் ஓட்டுகிறார் என்றும், அவருக்கு உரிமம் வழங்கி அனுமதி அளித்ததே இந்த மாநில அரசுதான் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மொபைல் செயலி பயன்பாட்டு மொழிக்கும் உள்ளூர் மாநில மொழிக்கும் இடையே ஏற்பட்ட இந்த விவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in