ஐய்யோ பாவம்… வீட்டுக்குள்ள விளையாட வந்தது ஒரு குத்தமா..? பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை இரக்கமே இல்லாம.. ஏர் கன்னால் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்..! கதறித் துடித்த உரிமையாளர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐய்யோ பாவம்… வீட்டுக்குள்ள விளையாட வந்தது ஒரு குத்தமா..? பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை இரக்கமே இல்லாம.. ஏர் கன்னால் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்..! கதறித் துடித்த உரிமையாளர்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், முடிகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த முத்தாரம் கிராமத்தில் மிருகத்தனமான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். அந்தப் வளர்ப்பு நாய் விளையாடிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ரௌது ஜனய்யா என்பவரின் வீட்டு வளாகத்திற்குள் அடிக்கடி சென்று வந்துள்ளது. பக்கத்து வீட்டு நாய் தனது வீட்டுக்குள் அடிக்கடி வருவது ஜனய்யாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர் அந்த நாயின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் மனதில் கடுமையான ஆத்திரத்தையும் முன்விரோதத்தையும் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், நாயின் மீதிருந்த ஆத்திரத்தின் காரணமாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரௌது ஜனய்யா, தான் வைத்திருந்த ஏர் கன்னை எடுத்து வந்து அந்தப் அப்பாவி நாயைச் சுட்டுள்ளார். ஏர் கன்னில் இருந்து வெளிவந்த குண்டு உடலில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அந்த நாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தனது செல்லப் பிராணி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் ராமு, உடனடியாக முடிகொண்டா காவல் நிலையத்திற்குச் சென்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜனய்யா மீது புகார் அளித்தார்.

Advertisement

நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், முடிகொண்டா காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ரௌது ஜனய்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஏர் கன் மற்றும் அதன் சட்டப்பூர்வ உரிமப் பின்னணிகள் குறித்தும், துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in