பகீர்… காதலியை கத்தியால் குத்தி சாக்கு மூட்டையில் அடைத்த காதலன்..! மகனின் கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த தாய்..! ஹைதராபாத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்… காதலியை கத்தியால் குத்தி சாக்கு மூட்டையில் அடைத்த காதலன்..! மகனின் கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த தாய்..! ஹைதராபாத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாஹீன் நகர் பிஸ்மில்லா காலனியில் 23 வயதான பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஹானா காதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாலாபூர் பிஸ்மில்லா காலனியில் தங்கி, திருமண மண்டபங்களில் ‘வெய்ட்ரஸ்’ ஆக வேலை செய்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய காதலன் மற்றும் அவரது தாயாரை பாலாபூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ரேஹானாவுக்கும் பிஸ்மில்லா காலனியைச் சேர்ந்த அஹமத் சலாம் என்ற ஷேக் அஹமத் சலாம் என்பவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்துள்ளது. ஆகஸ்ட் 17-க்கு முன்பாக, இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வது தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த அஹமத் கத்தியால் குத்தி ரேஹானாவை படுகொலை செய்தார். கொலை செய்த பிறகு, சான்றுகளை அழிப்பதற்காக அஹமத் தனது தாய் ஆயிஷா பேகத்தின் உதவியுடன் ரேஹானாவின் உடலை ஒரு சணல் சாக்கு மூட்டையில் அடைத்து, தங்களது வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்துள்ளார்.

Advertisement

ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை சுமார் 6:25 மணிக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டை இருப்பதாகப் பாலாபூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிலிருந்த சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்த ரேஹானாவின் உடலைக் கைப்பற்றினர். தீவிர விசாரணைக்குப் பிறகு அஹமத் சலாம் மற்றும் அவரது தாயார் ஆயிஷா பேகம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 18 அன்று போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் 19 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 103, 238 மற்றும் 3ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலாபூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in