“வாழ்க்கையில முதன்முறையா கங்கையில குளிக்கப்போறேன்… ரொம்ப அற்புதமா உணர்றேன்..!” 13 வருடக் கனவு நனவானதாக இந்தியில் பேசிய ஜப்பானிய அழகி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாழ்க்கையில முதன்முறையா கங்கையில குளிக்கப்போறேன்… ரொம்ப அற்புதமா உணர்றேன்..!” 13 வருடக் கனவு நனவானதாக இந்தியில் பேசிய ஜப்பானிய அழகி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ ..!!

Published

on

வெளிநாட்டவர்கள் இந்திய கலாசாரத்திலும் மொழியிலும் ஈர்க்கப்பட்டு அதில் ஒன்றிணைவது எப்போதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்ஸ்டாகிராமில் ‘மேயோ ஜப்பான்’ என்று பிரபலமாக அறியப்படும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண், 13 ஆண்டுகளாக இந்திய கலாசாரத்தையும் இந்தி மொழியையும் கற்றுவந்துள்ளார். தற்சமயம் மும்பையில் நடிகை மற்றும் கன்டென்ட் கிரியேட்டராக பணியாற்றி வரும் இவர், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் பாரம்பரிய உடையில் சென்று முதன்முறையாக புனித நீராடியுள்ளார். கங்கை நதியில் நீராடும்போது மிகச் தெளிவாக இந்தியில் பேசியபடி அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்தியர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது.

ஹரித்வார் கங்கை படித்துறையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், மேயோ புன்னகையுடன் “வாழ்க்கையில் முதன்முறையாக கங்கையில் குளிக்கப்போகிறேன்…” என்று அழகான இந்தியில் கூறுகிறார். கங்கை நதியின் வேகமான நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்காக கரையில் உள்ள சங்கிலியைப் பிடித்துக்கொண்டவாறே நீரில் இறங்குகிறார். தொடர்ந்து மூன்று முறை நீரில் மூழ்கிப் புனித நீராடிய பின்னர், “நன்றாகக் குளித்துவிட்டேன்… மிகவும் அற்புதமாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். மேலும், “13 ஆண்டுகள் இந்தி மற்றும் இந்திய கலாசாரத்தைக் கற்றுக் கொண்ட பிறகு, இறுதியாகக் கங்கையில் புனித நீராடிவிட்டேன். எனது வாழ்க்கையில் இந்த அழகான மற்றும் எதிர்பார்க்காத பயணத்தை உருவாக்கியதற்கு இந்தியாவுக்கு நன்றி” எனத் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcgDo7yiup1/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும், பல இந்தியப் பயனர்கள் மேயோவின் அன்பையும் மரியாதையையும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் “கங்கையில் மூழ்கி எழுந்த பிறகு உங்கள் முகத்தில் தெரியக்கூடிய அந்தப் பிரகாசம் கங்கை தாயின் அருள்” என்று வாழ்த்தியுள்ளனர். அதேசமயம், சிலர் அன்பு கலந்த அக்கறையோடு, “ஜப்பானியரான உங்களுக்கு இங்குள்ள தண்ணீரின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கலாம், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்” என்றும், மழைக்காலத்தில் கங்கையில் ஓடிவரும் இயற்கை மூலிகைகளின் புனிதத்தன்மை பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in