அடக்கடவுளே… இன்னும் கொஞ்சம் முன்னாடி போயிருந்தா அவ்வளவுதான்… நடுரோட்டில் பேருந்து சென்றபோதே உள்வாங்கிய சாலை… மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..! திடுக்கிடும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே… இன்னும் கொஞ்சம் முன்னாடி போயிருந்தா அவ்வளவுதான்… நடுரோட்டில் பேருந்து சென்றபோதே உள்வாங்கிய சாலை… மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..! திடுக்கிடும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஹரித்வாரின் கொத்வாலி நகர் அருகே பள்ளி குழந்தைகள் பலரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலை உள்வாங்கியதால் பெரும் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வழியே பேருந்து வந்தபோது, சாலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து விழுந்ததால், பேருந்தின் ஒரு சக்கரம் பள்ளத்திற்குள் சிக்கி வாகனம் ஒருபுறமாகச் சாய்ந்தது.

பேருந்து திடீரென ஒருபுறமாகச் சாய்ந்ததைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவரது இந்தச் சமயோசிதமான நடவடிக்கையால், பேருந்து மேலும் சரிந்த பகுதிக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் பேருந்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் உட்பட யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துவதற்கு முன்பாக, பேருந்து இன்னும் சிறிதளவு முன்னால் சென்றிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in