“அவரு வீட்டுக்கு கூப்பிட்டாரு… ஆனா நான் போகல… நடுவுல கேம் ஆடிட்டாங்க…” விஜய் குறித்து உதயநிதி ஓபனா சொன்ன அந்த விஷயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவரு வீட்டுக்கு கூப்பிட்டாரு… ஆனா நான் போகல… நடுவுல கேம் ஆடிட்டாங்க…” விஜய் குறித்து உதயநிதி ஓபனா சொன்ன அந்த விஷயம்..!!

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றும் மே 3-ஆம் தேதி தமிழக முதல்வர் யார் என்று தெரியவந்தது. திமுகதான் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என நினைத்த நிலையில், 3வது கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவியேற்றப்பின் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களின் வீட்டுற்கு சென்று வந்தார் விஜய்.

இதன்பின் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது. விஜய் அதற்காக பதிலளிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த மிசாவில் ஸ்டாலின் கைதானதை கிண்டலான உடல்மொழியை வைத்து பேசி சர்ச்சையானது. இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பக்குவமான மனநிலையில் சரியாக ஹாண்டில் செய்தார். இந்நிலையில், விஜய்க்கும் உதயநிதிக்கும் ஏற்பட்ட சில பழைய சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

உதயநிதி சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், விஜய்யுடன் சேஃப் டிஸ்டன்ஸ் தான் மெயின்டெயின் செய்கிறேன், அவரை புத்தாண்டுக்கு சந்தித்தேன், யாரையும் அவர் நெருங்கவிடமாட்டார். நட்பாகிவிட்டால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். என்னிடம் நெருக்கமாகத்தான் இருந்தார், ஆனால் சிலர் எங்களிடையே கேம் விளையாடிவிட்டார்கள். அதனால் பெரிய ஸ்பேஸ் உருவாகிவிட்டது. பின் நானே அவரிடம் நேரில் சென்று இதுதான் நடந்தது, இதையெல்லாம் நான் செய்யவில்லை என்று விளக்கியதால் புரிந்துகொண்டார். இப்போது அடிக்கடி ஃபோனில் பேசுகிறோம், அடிக்கடி அவரது வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிடுவார், ஆனால் நான் போயி பல காலமாகிவிட்டது, கடைசியாக தேர்தலுக்கு முன் போனேன், அதற்குப்பின் போகவில்லை என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in