“அய்யோ கடவுளே..” சாமி கும்பிட போன இடத்துல இப்படி ஒரு துயரமா..? 108 டுவ்கி அடித்தபோது பறிபோன உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கடவுளே..” சாமி கும்பிட போன இடத்துல இப்படி ஒரு துயரமா..? 108 டுவ்கி அடித்தபோது பறிபோன உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

பிரபல இந்து புனிதத் தலமான பத்ரிநாத் தாமில் உள்ள தப்த குண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த துயரச் சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முதிய பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான ராமு தேவி மற்றும் அவரது சகோதரியான 63 வயதான பிரேம் தேவி ஆகிய இருவரும் பத்ரிநாத்தில் நடைபெற்று வந்த பாகவத் கதையில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 4 அன்று வந்திருந்தனர். பத்ரிநாத் சுவாமி தரிசனத்திற்கு முன்பாக தப்த குண்டின் வெந்நீரில் தொடர்ந்து அதிக நேரம் மூழ்கி நீராடியதால், உடலில் ஆக்சிஜன் குறைபாடு அல்லது பிற மருத்துவக் காரணங்களால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை காலை 4:30 மணியளவில், பில்வாராவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் குழுவைச் சேர்ந்த நான்கு பெண்களும் ஒரு ஆணும் சுவாமி தரிசனம் செய்யக் கோயிலுக்குச் சென்றனர். தரிசனத்திற்கு முன், ஆடவர் தப்த குண்டில் ஆண்கள் பகுதியில் நீராடச் செல்ல, பெண்கள் தனியாக உள்ள தப்த குண்டில் நீராடத் தொடங்கினர். அங்கு சக பெண்களின் கூற்றுப்படி, ராமு தேவியும் பிரேம் தேவியும் கடவுளின் நாமத்தை உச்சரித்தவாறே தொடர்ந்து 108 முறை நீரில் மூழ்கி நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, சூடான தண்ணீரில் தொடர்ந்து மூழ்கி நீராடியதால் திடீரென இரு பெண்களும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்த பெண்கள் கூச்சலிடவே, உடனடியாக இருவரையும் நீரிலிருந்து வெளியே எடுத்தனர்.

Advertisement

சம்பவ இடத்திலிருந்த காவலர்களும் உள்ளூர் மக்களும் இரு பெண்களுக்கும் சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்து சுயநினைவை வரவழைக்க முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் அவசர அவசரமாகப் பத்ரிநாத் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவருமே ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். காவல் துறையினர் உடல்களைப் பெற்றுத் தேவையான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, பில்வாராவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் குழுவிலும் அவர்களின் குடும்பத்தினரிடையேயும் பெரும் சோக அலை வீசியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in