அதிர்ச்சி.! பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத ஏக்கம்… 6 வயது மகனைத் தவிக்க விட்டு விட்டு… மின்விசிறியில் தூக்கிட்டுப் பெண் தற்கொலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி.! பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத ஏக்கம்… 6 வயது மகனைத் தவிக்க விட்டு விட்டு… மின்விசிறியில் தூக்கிட்டுப் பெண் தற்கொலை..!!

Published

on

ஹைதராபாத் கப்ரா பகுதியில் உள்ள மாருதி ஜூபிலி என்லேவ் குடியிருப்பில் கோபாலகிருஷ்ணா துளசிதாஸ் மற்றும் சுவாதி மகாஜன் (35) தம்பதியினர் தங்கள் 6 வயது மகன் சொரூப்புடன் வசித்து வந்தனர். முன்னதாக ஐக்கிய ராஜ்யத்தில் (UK) வசித்து வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்து இங்கு வாழ்ந்து வந்தனர். கணவர் கோபாலகிருஷ்ணா வேலையில் இருந்த நிலையில், சுவாதி தீவிரமாக வேலை தேடி வந்துள்ளார்.

நீண்ட நாட்களாகப் பல முயற்சிகள் செய்தும் சுவாதிக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கும், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளானார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி சுவாதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Advertisement

வீட்டின் வரவேற்பறையில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு சுவாதி மகாஜன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்துக் கணவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குஷாயிகுடா காவல் நிலையப் போலிஸார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in