8 மணி நேரத்துல 4,000 ரூபாயா..? கிழிந்த துணி, அழுக்கு முகத்துடன் ‘ஹைடெக்’ பிச்சைக்காரராக மாறிய வாலிபர்..! யூடியூபரின் விசித்திர பரிசோதனை… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

8 மணி நேரத்துல 4,000 ரூபாயா..? கிழிந்த துணி, அழுக்கு முகத்துடன் ‘ஹைடெக்’ பிச்சைக்காரராக மாறிய வாலிபர்..! யூடியூபரின் விசித்திர பரிசோதனை… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்..!!

Published

on

“பிழைக்க வழியில்லாதவர்கள் பிச்சை எடுக்கப் போகலாம்” என்று விளையாட்டாகச் சொல்லப்படுவதைக் கேட்டு, உண்மையில் பிச்சை எடுத்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைச் சோதிக்க பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் முடிவு செய்தார். இதற்காக, தனது நண்பரான சச்சினை அழைத்துக்கொண்டு ஹரித்வாரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றார். அங்கு, பார்ப்பவர்களை நம்ப வைப்பதற்காக சச்சினுக்கு அழுக்குபடிந்த கிழிந்த உடைகளை உடுத்தி, முகத்திலும் அழுக்கை பூசி, கழுத்தில் கியூஆர் கோட் ஒன்றைத் தொங்கவிட்டு, ஒரு ‘ஹைடெக் பிச்சைக்காரராக’ மாற்றினார்.

இந்தச் சோதனையில், சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில், வெறும் 8 மணி நேர பிச்சையில் ரூ.4,000 கிடைத்தது. இந்த வருமானம் அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே வேகத்தில் ஒருவர் தினமும் பிச்சை எடுத்தால், மாதம் சுமார் ரூ.1.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று யூடியூபர் புருஷோத்தம் கூறினார். அதேவேளையில், நாள் முழுவதும் பிச்சை எடுப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த சோர்வை ஏற்படுத்துவதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

Advertisement

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ரூ.4,000 கிடைத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், மத வழிபாட்டுத் தலங்களில் பிச்சை எடுப்பது ஒரு வாழ்வாதாரமாக மாறிவிட்டதா என்று சிலர் கேள்வி எழுப்பினர். மேலும், ஒரே நாள் பரிசோதனையை வைத்து, பிச்சை எடுக்கும் மக்களின் அன்றாட வாழ்வின் உண்மையான கஷ்டங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in