“ரொம்ப ஸ்மார்ட்… ரொம்ப ஸ்மார்ட்..! இது இரயில் நிலையமா இல்ல பெருங்கடலா…?” கவாஹத்தி வெள்ள நீரைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளை வறுத்தெடுத்த பயணியின் நக்கல் பேச்சு வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரொம்ப ஸ்மார்ட்… ரொம்ப ஸ்மார்ட்..! இது இரயில் நிலையமா இல்ல பெருங்கடலா…?” கவாஹத்தி வெள்ள நீரைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளை வறுத்தெடுத்த பயணியின் நக்கல் பேச்சு வைரல்..!!

Published

on

குவாஹத்தியில் பெய்த கனமழைக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கத்தின் நிலையைச் சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், குவாஹத்தி இரயில் நிலையப் பகுதியில் உள்ள சாலைகளில் நீர் தேங்கியிருப்பதும், பயணிகள் வெள்ள நீரில் கடந்து செல்வதும் காட்டப்பட்டுள்ளது. இந்நிலை நகரத்தின் “ஸ்மார்ட் சிட்டி” அந்தஸ்தைப் பழிக்கும் விதமாகவும், அதிகாரிகளுக்கு எதிரான கிண்டல் மற்றும் விமர்சனங்களை எழுப்பும் விதமாகவும் மாறியுள்ளது.

வீடியோவைப் பதிவுசெய்பவர், தேங்கியுள்ள தண்ணீரைச் சுட்டிக்காட்டி குவாஹத்தியை “ஸ்மார்ட் சிட்டி”யாக மாற்றப் பொறுப்பேற்ற தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் முகங்களை நேரலையில் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நக்கலாகக் கூறுகிறார். தொடர்ந்து “மிகவும் ஸ்மார்ட்… மிகவும் ஸ்மார்ட்!” என்றும், இந்த வெள்ள நீரைப் பார்க்கும்போது ஏதோ ஓர் “பெருங்கடல்” போலத் தோன்றுவதாகவும் விமர்சிக்கிறார். மேலும், இரயில் நிலையத்திற்கு வர வேண்டியவர்கள் இப்படித் தண்ணீரில் தத்தளித்துத் தான் வர வேண்டும் என்றும், இப்போதைக்கு ஒரு படகு ஓடினால் பயணிகள் படகிலேயே இரயில் நிலையத்திற்கு வந்து சேரலாம் என்றும், அஸ்ஸாமின் குவாஹத்தி இரயில் நிலையம் நீரின் மீதே அமைந்திருப்பதைப் போலக் காட்சி அளிக்கிறது என்றும் நகைச்சுவையாகச் சாடுகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcSDnaJv8mz/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாஹத்தியில் மழை பெய்யும்போதெல்லாம் இதுபோன்ற செயற்கை வெள்ளமும் நீர் தேக்கமும் தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ஒரு முக்கிய இரயில் நிலையப் பகுதியிலேயே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவென்று கேள்வி எழுப்பும் அவர்கள், “ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இன்னும் எவ்வளவு காலம் தான் மக்கள் இதுபோன்ற செயற்கை வெள்ளப் பெருக்கால் அவதிப்படுவது?” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in