LATEST NEWS
அய்யோ..! என்ன கொடுமை இது… இளைஞரைத் தலைகீழாகக் கட்டிவைத்துத் தாக்குதல்.. காதலியை பார்க்க போன இடத்தில் நேர்ந்த கொடூரம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கயிற்றால் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
மிர்சாபூர் போலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இரவு 11:30 மணியளவில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் திருமணமான தனது காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் விவகாரம் இருந்து வந்ததும், அது பெண்ணின் வீட்டாருக்குத் தெரிந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞர் வீட்டிற்கு வந்ததை அறிந்த குடும்பத்தினர் அவரைப் பிடித்து கயிற்றால் தலைகீழாகக் கட்டிவைத்துத் தாக்கியுள்ளனர். பின்னர் மரக் கட்டையிலும் அவரைக் கட்டி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். சம்பவத்தன்று காலையில் காவல்துறையினர் இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு வெளியே சமரசம் செய்துகொண்டதால், எழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. இதனால் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக இளைஞர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கொடூர வீடியோ வைரலானதால், இளைஞரிடம் நடந்த மனிதநேயமற்ற செயல் குறித்து காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
