CRIME
அடக்கடவுளே..! திடீரென கேட்ட அலறல் சத்தம்… ஓடிவந்து பார்த்த அண்டை வீட்டார் கண்ட பகீர் காட்சி.. 75 வயது ஆசிரியையை கொடூரமாகக் கொன்ற போதை ஆசாமி..! ரூ.100 பணத்துக்காக நடந்த பயங்கரம்..!!
குருகிராமின் நியூ காலனி பகுதியில் தனியாக வசித்து வந்த 75 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை மது சர்மா என்பவர், அவரது வீட்டிற்குள் மர்மமான முறையில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அங்குச் சென்ற அண்டை வீட்டார் கதவின் அருகே அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நியூ காலனி காவல் நிலையப் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான 22 வயதான சூரஜ் குப்தா என்ற வாலிபர் திருடும் நோக்கில் ஆசிரியை வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. வீட்டில் வெளிச்சம் இல்லாததால் யாரும் இல்லை என நினைத்து உள்ளே புகுந்த குற்றவாளி, அங்கு இருந்த ஆசிரியையிடம் ₹100 பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆசிரியை திருட்டைத் தடுத்து எதிர்த்ததால், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த வாலிபர் அவரைத் தள்ளிவிட்டு கழுத்தைப் நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அண்டை வீட்டார் திரண்டதை அறிந்த குற்றவாளி, வீட்டின் கூரையிலிருந்து குதித்து அருகில் உள்ள கட்டிடத்தில் சென்று ஒளிந்துகொண்டான். சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், சுமார் 3 மணி நேரத்திற்குள் அருகிலிருந்த வீட்டின் வளாகத்தில் ஒளிந்திருந்த குற்றவாளியைக் கைது செய்தனர். தற்போது அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
