LATEST NEWS
“திரையில் ஹீரோ.. ஆனா நிஜத்தில்..!” முதல்வர் விஜய் பற்றி திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி உடைத்த ‘அந்த’ அதிரடி உண்மை.. பரபரக்கும் அரசியல் களம்..!!
திரையில் கதாநாயகனாக நடித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நிஜ அரசியலில் ஒரு வில்லனைப் போலவே செயல்பட்டு வரலாற்றைத் திரித்துப் பேசி வருகிறார் என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளைச் சந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். திராவிட இயக்கங்களின் வரலாற்றுப் பங்களிப்புகளையும் தியாகங்களையும் மூடிமறைத்து, மேடைகளில் தவறான வரலாற்றுத் தரவுகளைப் பரப்பி விஜய் மக்கள் மத்தியில் அரசியல் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக அவர் சாடினார்.
சினிமாவில் நீதி நியாயங்கள் பேசும் விஜய், அதிகாரத்திற்கு வந்த பிறகு மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வருவதாக ரகுபதி சுட்டிக்காட்டினார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் தவெக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும், மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் விளம்பர அரசியலையே அவர் நம்பியிருப்பதாகவும் விமர்சித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தவெக அரசு மீது திமுக தொடுத்து வரும் இந்தத் தொடர் தாக்குதல்கள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
