LATEST NEWS
CM சார்..! யாரை சீண்டிப் பார்த்திருக்கீங்க தெரியுமா..? பிரச்சினைனு வந்துட்டா விடமாட்டோம்.. முதல்வர் விஜய்க்கு மேயர் பிரியா எச்சரிக்கை..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதன் தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா கலந்து கொண்டு தவெக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது பேசிய மேயர் பிரியா, “யாரை சீண்டிப் பார்த்திருக்கீங்க தெரியுமா? நாங்களாக எந்தப் பிரச்சினைக்கும் செல்ல மாட்டோம்; ஆனால், எங்களைத் தேடி வரும் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிடவும் மாட்டோம்” என ஆவேசமாக எச்சரித்தார். மேலும், முதலமைச்சர் விஜய் நிஜ அரசியலை விடுத்து இன்னும் திரைப்பட பாணியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், தியாக பாரம்பரியம் கொண்ட திமுகவை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்
அவசரநிலை பிரகடனத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட மிசா சட்டம் மற்றும் தியாகங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தவறாகப் பேசியதைக் குறிப்பிட்ட மேயர் பிரியா, மிசா சட்டம் குறித்துப் பேசும் விஜய், அன்று பயந்து முதுகைக் காட்டி ஓடியவர் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
