LATEST NEWS
“அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க..” இந்திய வீராங்கனைக்கு நேர்ந்த அநீதியால் எடுத்த விபரீத முடிவு…. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ..!!
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆஇந்திய வீராங்கனைக்கு நேர்ந்த அநீதியால்சிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய வுஷு அணியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த வீராங்கனை திவ்யான்ஷி சவுத்ரி திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், சுமார் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்; அதில் தனது ஆழமான வேதனையையும் துயரத்தையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறித் தனது பெற்றோருக்குக் கண்ணீருடன் கடைசிமுறையாக மன்னிப்புக் கேட்டுள்ளார். வுஷு கூட்டமைப்பு தன்னைத் திட்டமிட்டு தவறான முறையில் காயமடையச் செய்து, பின்னர் அதையே காரணமாகக் காட்டி அணியில் இருந்து நீக்கியுள்ளதாகத் திவ்யான்ஷி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் விளையாட்டுத் துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் ஒரு முன்னணி விளையாட்டு வீராங்கனைக்கு கூட்டமைப்பிற்குள் இத்தகைய அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நுகர்வோர் மற்றும் விளையாட்டு ரசிகர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விளையாட்டு அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இந்த வீடியோவைக் கையில் எடுத்து, வீராங்கனை திவ்யான்ஷியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வுஷு கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
