LATEST NEWS
போயிருக்க இடத்தை திருப்திப்படுத்தவே திருமா அப்படி பேசியிருக்காரு… கூட்டணி உடைய திமுக காரணம் இல்லை.. கே.எஸ் நேரு பரபரப்பு குற்றசாட்டு…!!
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதற்கு திமுகதான் 100% காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளை திமுக முறையாக நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திருமாவளவனின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, திருமாவளவன் தற்போது போயிருக்கும் புதிய இடத்தை (தவெக கூட்டணி) திருப்திப்படுத்துவதற்காகவே திமுக மீது இவ்வாறு அவதூறாகப் பேசியுள்ளார் என்று கே.என்.நேரு சாடினார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அரவணைத்து, அனுசரித்துச் செல்லும் தலைவர் வேறு யாருமில்லை என்று கே.என்.நேரு புகழாரம் சூட்டினார். கூட்டணி உடைவதற்கு திமுக எப்போதும் காரணமாக இருக்காது, இனியும் இருக்கவே இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
