LATEST NEWS
சொந்தக் காசா..? வாய்ப்பே இல்லை… எச்.எம்-களுக்கு நிம்மதி… காலை உணவுத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!!
காலை உணவுத் திட்ட செலவினங்களைச் சொந்த நிதியில் தலைமையாசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் என்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காலை உணவுத் திட்டத்திற்கான செலவினங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.
