ஆசிரியர்களுக்கு செக்..! கல்விச் சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆசிரியர்களுக்கு செக்..! கல்விச் சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Published

on

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் வகையில் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தங்களின் கல்விச் சான்றுகளைத் தவறாமல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in