LATEST NEWS
“சிம்எம் விஜய் ஆட்சியில் மெகா ஊழல்..” தமிழக அரசை நோக்கி அண்ணாமலை விடுத்த பகீர் எச்சரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் மீண்டும் ஊழல் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் இருப்பது உண்மைதான் என்றாலும், தற்போதைய சில அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாங்கள் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்று வந்துள்ளோம், அதனால் எங்களுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்று கூறி சிலர் கமிஷன் கேட்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு வருடம் கழித்து பிரச்சினைகள் வெடிப்பதற்கு முன்பாகவே இந்த விஷயத்தை இப்போதே தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் எச்சரித்துள்ளார்.
