“இனிமேல் உன்கூட வாழ முடியாது..!” மனைவி சொன்ன வார்த்தை.. மனமுடைந்து கணவன் எடுத்த விபரீத முடிவு.. திருமணமான 6 மாதத்தில் நேர்ந்த சோகம்.. உறைய வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“இனிமேல் உன்கூட வாழ முடியாது..!” மனைவி சொன்ன வார்த்தை.. மனமுடைந்து கணவன் எடுத்த விபரீத முடிவு.. திருமணமான 6 மாதத்தில் நேர்ந்த சோகம்.. உறைய வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் அருகே உள்ள மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அப்பெண் தனது ஊரில் உள்ள கோவில் திருவிழாவிற்காகப் பெற்றோர் வீட்டிற்குச் சென்றவர், ஒரு வாரத்திற்கும் மேலாகியும் கணவன் வீட்டிற்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவினாஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை; பின்னர் பெற்றோருடன் ஹாசனுக்குச் சென்று மனைவியை அழைத்தபோது, அவர் அவருடன் குடும்பம் நடத்த மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட அவினாஷ், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த குனிகல் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in