LATEST NEWS
BREAKING: இனி ஆசிரியர்கள் சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு சாப்பாடு… காலை உணவு திட்டத்தில் தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவை வழங்குவதற்கு முன்னதாக, ஆசிரியர்கள் முதலில் அதனைச் சாப்பிட்டுப் பார்த்து உணவின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் உணவின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பிறகே, அதனை மாணவர்களுக்குப் பரிமாற வேண்டும் என்று அந்த உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, தமிழக கல்வி வட்டாரத்தில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
