அன்று ரூல்ஸ் பாலோ பண்ண சொன்னாரே உதயநிதி.. அதைத்தான் நம்ம CM பண்ணியிருக்காரு… அன்பில் மகேஷ் கைதில் அமைச்சர் நிர்மல்குமார் அட்டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்று ரூல்ஸ் பாலோ பண்ண சொன்னாரே உதயநிதி.. அதைத்தான் நம்ம CM பண்ணியிருக்காரு… அன்பில் மகேஷ் கைதில் அமைச்சர் நிர்மல்குமார் அட்டாக்..!!

Published

on

பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புச் சான்றிதழ்களைப் பெற, பள்ளி நிர்வாகங்களை மிரட்டி ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “அன்று ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொன்னாரே அன்பில் மகேஷ், இப்போது அவரை ஊழல் வழக்கில் கைது செய்ததன் மூலம் ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோப்பை மட்டுமே திறந்ததற்கே இவ்வளவு பெரிய முறைகேடு வெளிவந்துள்ள நிலையில், இது திமுகவுக்கு மிகப்பெரிய அவமானம் என்று நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பிற்கான சான்றிதழில் கூட ஊழல் செய்து, அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளிகளையும் விட்டுவைக்காமல் பணம் பறித்துள்ளதாக அவர் சாடினார். “கோப்புகளைத் திறங்கள்” என்று முன்னர் வலியுறுத்திய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், தற்போது ஒரே ஒரு கோப்பைத் திறந்ததற்கே இதைப் ‘பழிவாங்கும் நடவடிக்கை’ எனக் கூறுவது வெட்கக்கேடானது என்றும், ஒரே ஆண்டில் 400 கோடி ரூபாய் என்றால் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது மருத்துவமனைக்குச் சென்ற அன்பில் மகேஷ், சடலங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுததுடன், “ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொல்லியும் கேட்கலையே” எனத் தெரிவித்திருந்தார். தற்போது சிறைச்சாலை வாசலில் பேசும் திமுகவினர், “கரூர் சம்பவத்திலேயே விஜய்யின் கதையை முடித்திருக்க வேண்டும்” என்று பேசுவதைப் சுட்டிக்காட்டிய நிர்மல் குமார், கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷுக்குத் தொடர்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்றும், அன்றைய தினம் அன்பில் மகேஷ் ஆடியது வெறும் நாடகம் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நடவடிக்கை யாரையும் பழிவாங்குவதற்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும், செய்த தவறுக்கான விளைவுதான் இது என்றும் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். 2ஜி விவகாரத்தில் எத்தனை பேர் மறைந்தார்கள், காணாமல் போனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிப்பார்கள் என்று அவர் கூறினார். மேலும், அன்பில் மகேஷ் இந்த வழக்கில் ஜாமீன் கேட்கக் கூடாது என்றும், குறுக்கு வழியில் வெளியேற நினைக்காமல் சட்டப்படி வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in