ரூ.100 கோடி வசூல் ட்விஸ்ட்.. “அரசகுமார் சொன்ன பொய்களுக்கு அன்பில் பொறுப்பல்ல..” நீதிமன்றத்தை அதிர வைத்த வாதங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.100 கோடி வசூல் ட்விஸ்ட்.. “அரசகுமார் சொன்ன பொய்களுக்கு அன்பில் பொறுப்பல்ல..” நீதிமன்றத்தை அதிர வைத்த வாதங்கள்..!!

Published

on

தனியார் பள்ளிகளுக்கு அரசாங்க அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைதாகி சிறையிலுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீது அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை முன்வைத்துள்ளார். சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, அன்பில் மகேஷ் ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல மாட்டார் என்றும், இந்த வழக்கில் கூறப்படும் முறைகேடுகளுக்கும் அவருக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்றும் வாதாடப்பட்டது.

மேலும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் என்பவரே தவறான மற்றும் பொய் தகவல்களைக் கூறி தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளார் என்றும், அவர் சொன்ன பொய்களுக்கு அன்பில் மகேஷை ஒருபோதும் பொறுப்பாக்க முடியாது என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர்கள் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறையினர் தங்களுக்குச் சாதகமாக அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக மாற்றியுள்ளனர் என்றும், போதிய ஆதாரங்கள் இன்றி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in