அடுத்த ஷாக்..! 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி டார்கெட் வசூல்.. அன்பில் மகேஷ் வங்கி கணக்குகளை முடக்கி போலீசார், அமலாக்கத்துறை அதிரடி வேட்டை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த ஷாக்..! 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி டார்கெட் வசூல்.. அன்பில் மகேஷ் வங்கி கணக்குகளை முடக்கி போலீசார், அமலாக்கத்துறை அதிரடி வேட்டை..!!

Published

on

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.400 கோடி முறைகேடாகப் பணம் வசூலித்த வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வங்கி கணக்குகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலக்கு (டார்கெட்) நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள சுமார் 5,000 தனியார் பள்ளிகளிடமிருந்து இந்த ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால், இது தொடர்பான அனைத்துப் பணப்பரிமாற்ற ஆவணங்களையும் சென்னை காவல்துறை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

Advertisement

இதற்கிடையே, இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள அரசக்குமார் என்பவரின் வங்கி கணக்கிற்குச் சில தனியார் பள்ளிகள் நேரடியாகப் பணம் செலுத்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கலைவாணர் அரங்கத்தில் அன்பில் மகேஷ் முன்னிலையில் பேசப்பட்ட சில முக்கிய வீடியோ பதிவுகள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை முதன்மையாக வைத்துப் போலீசார் தங்களது விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in