“பசியில இருக்கவனுக்கு பிரியாணி கொடுத்தா வேண்டாம்னு சொல்வானா..?!” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்ட மாஸ் கணக்கு..! ஆதரவு தருமா திமுக..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பசியில இருக்கவனுக்கு பிரியாணி கொடுத்தா வேண்டாம்னு சொல்வானா..?!” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்ட மாஸ் கணக்கு..! ஆதரவு தருமா திமுக..?!

Published

on

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஏற்கனவே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்த இரண்டு தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. இதில் தி.மு.க. இரண்டாம் இடத்தையும், அ.தி.மு.க. மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இதனைத் தொடர்ந்து எஞ்சி உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இடைத்தேர்தல்களை வரும் டிசம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தனக்கு ஆதரவு தந்தால் அதை ஏற்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். பசும்பொன்னில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, இடைத்தேர் தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆதரவு அளித்தால்  ஏற்பீர்களா? என்ற கேள் விக்கு பதிலளித்த சீமான், “பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல அவன் என்ன பைத்தியக்கா ரனா? அவர்கள் ஆதரவு தந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம்” என்று குறிப்பிட்டார். இந்த ஆதரவை ஒரு தேர்தல் ஆதரவாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் கூட்டணியாகக் கருதக் கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.தனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாகவும், மக்கள் தன்னை சட்டமன்ற உறுப்பினராகப்  பார்க்க ஆசைப்படுவதால் அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் சீமானுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா என்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இடைத் தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்படட்டும். அதன் பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” என்று பதில் அளித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in