“அய்யோ என்ன கொடுமை இது…” ஒரே நாளில் 56 பேரைத் துரத்தித் துரத்திப் கடித்த வெறிநாய்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..! நரி செய்த செயலால் மனிதர்களைப் பழிவாங்கிய தாய் நாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ என்ன கொடுமை இது…” ஒரே நாளில் 56 பேரைத் துரத்தித் துரத்திப் கடித்த வெறிநாய்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..! நரி செய்த செயலால் மனிதர்களைப் பழிவாங்கிய தாய் நாய்..!!

Published

on

மேற்கு வங்காளத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமின் மோர்கிராம் பகுதியில் தெருநாய் ஒன்று நடத்திய தாக்குதலில் மொத்தம் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து லிபாடா, டாங்காபாடா, பரிபாடா, காதேம்பாடா, மோடல்படா மற்றும் மேரு பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பீதி நிலவி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒன்றரை மாதக் குழந்தை முதல் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வரை அடங்குவர். பலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் போல்ப்பூர் ஷியான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மக்களின் அச்சத்தைப் போக்க அந்த நாயைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளூர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இந்த தாக்குதலுக்கு உள்ளூர்வாசி யார் அலி ஷேக் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த நாயின் குட்டிகளை நரி தூக்கிச் சென்றுவிட்டதாகவும், அதன்பிறகே தாய் நாயின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு மனிதர்களைத் தாக்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தவுடன் காயமடைந்த அனைவரும் உடனடியாக கந்த்ரா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நாய் 56 பேரைத் தாக்கிய இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பய உணர்வு பரவியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in