அய்யோ கொடுமையே… பசியோடு காத்திருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. ஹெலிகாப்டர் நிவாரணம் விழுந்து முதியவர் துடிதுடித்துப் பலி..! கொதித்தெழும் மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே… பசியோடு காத்திருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. ஹெலிகாப்டர் நிவாரணம் விழுந்து முதியவர் துடிதுடித்துப் பலி..! கொதித்தெழும் மக்கள்..!!

Published

on

பீகார் மாநிலத்தின் சாரண் மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வெள்ளப் பெருக்கால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில், நிர்வாகத்தின் மீது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வீசப்பட்டு வந்தன. அப்போது, நிவாரணப் பொட்டலம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சோகம் நிலவுவதுடன், நிர்வாகத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் சாரண் மாவட்டத்தின் அம்னௌர் ஒன்றியத்திற்குட்பட்ட பரசுராம்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. பரசுராம்பூர் பகுதி வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பிற்காக அணைக்கட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் கீழே வீசப்பட்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த 65 வயதான அனில் குமார் சிங் (என்ற அப்பு சிங்) என்பவரின் தலையில் நிவாரணப் பொட்டலம் நேரடியாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன முதியவர் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காகச் சென்றபோது இந்த விபத்து நடந்ததாக அம்னௌர் காவல் நிலைய அதிகாரி விமலேஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், நில உப-ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தினார். அதன் பிறகு, காவல்துறையினர் முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சப்ரா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெலிகாப்டரில் இருந்து நிவாரணப் பொருட்களை வீசிய விதமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்கள், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in