“இனி கணிதம் கஷ்டமே இல்ல… கதை கேட்டு படிக்கலாம்!” ஸ்கூல் புக்ஸில் அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வரும் செம ட்விஸ்ட்.. குஷியில் மாணவர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி கணிதம் கஷ்டமே இல்ல… கதை கேட்டு படிக்கலாம்!” ஸ்கூல் புக்ஸில் அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வரும் செம ட்விஸ்ட்.. குஷியில் மாணவர்கள்..!!

Published

on

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், தமிழகத்தின் புதிய மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்தும், தற்போதைய நவீன உலகிற்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் காலங்களில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அதிக வண்ணப் படங்களுடன் வடிவமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெரும்பாலான மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் கணிதப் பாடத்தை, இனி வரும் காலங்களில் எளிய கதைகள் மற்றும் சுவாரசியமான வாழ்வியல் உதாரணங்கள் வாயிலாக எளிதாகக் கற்றுத்தர புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

இவற்றுடன், எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக மாணவர்கள் சர்வதேச அளவிலான தொழில்நுட்பப் போட்டிகளுக்குத் தங்களைச் சிறு வயது முதலே தயார்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in