LATEST NEWS
“அய்யோ… நாங்க அனாதையாயிட்டோமே” குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு… விஷம் குடித்த தாய், தூக்கில் தொங்கிய தந்தை… 2 சிறுவர்களின் கண்ணீர்க் கதறல்..!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள விநாயக நகரில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நரேஷ் மற்றும் மேகனா என்ற தம்பதியினருக்கு ஆயுஷ், மிதுன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலமாக நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக, இந்தத் தம்பதியினர் சொல்லொணா மன உளைச்சலுக்கும் துயரத்திற்கும் ஆளாகி வந்ததாகக் கூறப்படுகிறது.
வாழ்க்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் தாங்க முடியாமல், இருவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தங்களின் இரு குழந்தைகளையும் உறவினரின் வீட்டில் கொண்டு போய் விட்ட தம்பதியினர், அங்கிருந்து தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். பின்னர் கணவன் நரேஷ் தூக்கிட்டும், மனைவி மேகனா விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர்.
பெற்றோரின் இந்த அதிரடி முடிவால், தங்களின் எதிர்காலம் அறியாத இரு சிறு குழந்தைகளும் ஆதரவின்றி அனாதையாக நிற்கும் நெஞ்சை பதறவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இந்த இரட்டைத் தற்கொலைக்கான விரிவான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
