CRIME
“என் மகளைக் கொன்றவனுக்கு மரண தண்டனை கொடுங்க..!” தலையில் 7 வெட்டு.. காதலித்துத் திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. கதறித் துடிக்கும் தாயின் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி என்ற ஆசிரியை, அரசு ஆசிரியரான தனது கணவர் திலீப் குமார் யாதவால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திலீப்பை காதலித்த ஷாலினி, பெற்றோரைச் சம்மதிக்க வைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ஷாலினியைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த திலீப், ஆகஸ்ட் 7-ஆம் தேதி கூர்மையான ஆயுதத்தால் ஷாலினியின் தலையில் தாக்கி, பின்னர் குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையும் தெரிவிக்கின்றன.
‘Nine years ago, my daughter fought with her father to marry the man she loved. We agreed for her happiness, never imagining he would become her killer. My daughter loved Dilip deeply. After marriage, she never stayed with me even for a single day. The three brothers who killed… pic.twitter.com/oWbGAM2T79— Hate Detector 🔍 (@HateDetectors) August 11, 2026
கொலைக்குச் சான்றாக வீட்டில் இருந்த ரத்தக் கரைகளைக் கழுவிச் சுத்தம் செய்த திலீப், தனது மனைவி தவறி விழுந்துவிட்டதாகவும், வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாகவும் கூறி நாடகமாட முயன்றுள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த ஷாலினியின் குடும்பத்தினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளைக் கண்டெடுத்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவத்தன்று காலை நடைப்பயிற்சி சென்றதாகக் பொய் கூறிய திலீப்பின் பொய்களை, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அம்பலப்படுத்தின. ஷாலினியின் உடலில் 7 கடுமையான வெட்டுக் காயங்கள் இருந்ததும், அவர் நீரில் மூழ்கடிக்கப்பட்டே உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதலித்துத் திருமணம் செய்த கணவனே கொலையாளியாக மாறியதை எண்ணிக் கதறும் ஷாலினியின் தாய் பூல்மதி, தனது மகளின் மரணத்திற்குத் திலீப் மட்டுமின்றி, அவருக்கு உதவியாக இருந்த அவரது இரு சகோதரர்களும் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முதன்மை குற்றவாளியான திலீப்பைக் காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது இரு சகோதரர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். “தனக்காகப் பெற்றோரை எதிர்த்து வந்த மகளைக் கொடூரமாகக் கொன்ற திலீப் மற்றும் அவரது சகோதரர்கள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என ஷாலினியின் தாய் கண்ணீருடன் நீதியை வேண்டி நிற்கிறார்.
